Close Menu
    What's Hot

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!
    Featured

    75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5கோடியே 73 லட்சத்து 43ஆயிரத்து 291 ஆகும். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அத்தோடு 300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக சுமார் 3.60லட்சம் அரசு உழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. தேர்தல் பணியாளர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு அவர்கள், அந்ததந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு இன்றே சென்று விடுவர்.

    நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்பாகவே மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.
    Next Article திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!
    Editor TN Talks

    Related Posts

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    June 10, 2026

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    June 10, 2026

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.