வீ த லீடர் இயக்கத்தை தொடங்கியது ஏன்? அரசியலுக்கு வந்தது ஏன் என்பது குறித்து அண்ணாமலை யூடியூப் லைவில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது;-
வீ த லீடர் இயக்கத்தில் தற்போது 18 இலட்சம் பேர் இணைந்துள்ளனர். யாரையும் நான் இயக்கத்தில் சேரும்படி அழைக்கவில்லை.
பாஜகவினர் யாரையும் என்னுடன் வந்து இணையும்படி நான் அழைக்கவில்லை.
இளைஞர்கள் அவர்களாகவே வந்து சேர வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தேன்.
இந்த இயக்கத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள அதே வேளையில் லட்சக்கணக்கானோர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஓடிபி அடிப்படையில் உறுப்பினர்களை இணைக்கும் இயக்கம் வீ த லீடர்ஸ்.
கரூரில் உள்ள தனது வீடு, தான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை, ஆடு, மாடுகள் என தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கிராமத்தில் வாழும்போது நான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் யாரும் படக்கூடாது என்பதற்காகவே வீ த லீடர்ஸ் இயக்கத்தை ஆரம்பித்தேன்.
தமிழ்நாட்டின் 8.8 இலட்சம் ஏக்கர் நிலம் விவசாய நிலமாக இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது. இதில் கரூரில் 1.8 இலட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.
2020-இல் முருங்கை விவசாயிகளை இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன்.
சரியான பாதையில் எனது இயக்கம் சென்று கொண்டிருக்கிறது.
அரவக்குறிச்சியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களுக்கு வீ த லீடர்ஸ் இயக்கம் சார்பில் தையல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்
