மாநிலங்களில் சம்பளம் மற்றும் வருவாய் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-2023 நிதியாண்டில் நாட்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.35.95 லட்சம் கோடியாக இருந்தது. இதில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றின் செலவு மட்டும் ரூ.15.63 கோடியாக இருந்தது. மானிய செலவு ரூ.3.9 லட்சம் கோடியாகவும், மானிய உதவி செலவு மட்டும் ரூ.11.26 லட்சம் கோடியாகவும், இருந்தது. மொத்தமாக செலவு தொகை ரூ.29.99 லட்சம் கோடியாக இருந்தது. இது வருவாயின் மொத்த செலவினத்தில் 83 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளடு.
இந்த செலவினம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.6.26 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் செலவின தொகை மட்டும் 2.49 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் 2013-14 நிதியாண்டில் ரூ.96.479 கோடியாக இருந்த மானிய செலவு தற்போது ரூ.3.9 லட்சம் கோடியாக அதாவது 3.21 மடங்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் வருவாய் செலவினம் மட்டும் 2.66 மடங்கு உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இதேநேரம் 2022-2023 நிதியாண்டில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மாநிலங்களில் ஓய்வூதிய செலவு வட்டியை விட அதிகமாக இருந்துள்ளது என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.