தமிழ்நாட்டைப் போல பஞ்சாப்பிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்

நகர்ப்புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் விழாவில் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் நான் இங்கு இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் பசியுள்ள குழந்தையால் கற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் குழந்தை படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றார். இந்தத் திட்டத்தை எனது அமைச்சரவையிலும் விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‌ பஞ்சாப் இந்தியாவின் உணவுச் சுவர் என்றும் எங்களிடம் அரிசி மற்றும் கோதுமை பற்றாக்குறை இல்லை. எங்கள் விளைபொருட்களை மத்திய நிதிக்குழுவிற்கு வழங்குகிறோம் என்றார்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் ⁠கிராமப் புறங்களில் பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதோடு இடைநிற்றல் குறைந்துள்ளது என்று நீங்கள் சொன்னீர்கள். இது ஒரு நல்ல அறிகுறி என்றார்.

கைகோர்த்து வாழ்பவர்களுக்கு, இது ஒரு முக்கியமான திட்டம்.
இந்தத் திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மாணவருக்கு ரூ.30 வீதம் பயனடைவார்கள். இது மிகப் பெரிய சாதனை என குறிபிட்டார்.

கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசு கவனித்து வருகிறது. ஆரோக்கியம் நன்றாக இருந்தால், குழந்தை கற்றுக்கொள்ள முடியும். மேலும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார்..

அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் நல்லவர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆம் ஆத்மி ஒரு சாதாரண மனிதனின் கட்சி. பஞ்சாபில் உள்ள அரசுப் பள்ளிகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். 1000 ஆம் ஆத்மி மருத்துவமனைகளுக்குள் உருவாக்கப்படும். தற்போது 70,000 பேர் மட்டுமே உள்ளனர்.

மருத்துவத்தைப் பொறுத்தவரை பஞ்சாபில் அனைத்தும் இலவசம். 805 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 500க்கும் மேற்பட்டோர் ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். இது கல்வி நிலையைக் காட்டுவதாக குறிப்பிட்டார்.

ஆனால் தமிழ்நாடு செய்வது புதியது மற்றும் அடுத்த படியாகும். குழந்தைகள் சாப்பிட்டு படித்தால், அவர்களின் மதிப்பெண்கள் உயரும். குழந்தைகள் உண்மையைச் சொல்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்திற்கு வருகை தருமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பகவந்த் சிங் மான், பிரதமர் மோடி உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு முதலமைச்சர், துணைமுதலமைச்சரையும் பாராட்டுகிறேன். நாளை என்னுடைய அமைச்சரவையில் காலை உணவு திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறேன் என்றார்.

காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடங்க விழாவில் முன்னிலை வகித்த பஞ்சாப் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தின் மாதிரி தோன்றத்தை வழங்கி கௌரவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version