நாடளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனையொட்டி, டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,

“நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவாதிக்கத் தயார். ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றிய விவரங்கள் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இந்த தீர்மானத்தை முன்வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version