சுரெஷ் ரெய்னா தேர்வு செய்த உலக லெவன் அணியில் முன்னணி வீரர்களான தோனி, கோலி ஆகியோர் பெயர் இடம்பெறாதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில், இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல்-டைம் சிறந்த உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த அணியில், சச்சின், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த அணி…

1. பிரையன் லாரா
2. சச்சின் டெண்டுல்கர்
3. விவியன் ரிச்சர்ட்ஸ்
4. கேரி சோபர்ஸ்
5. யுவராஜ் சிங்
6. இயன் போத்தம்
7. ஆண்ட்ரூ பிளிண்டாப்
8. ஷேன் வார்னே
9. ஹர்பஜன் சிங்
10. அனில் கும்ப்ளே
11. சக்லைன் முஷ்டாக்
12. பால் ஆடம்ஸ் (இம்பேக்ட் வீரர்)

Share.
Leave A Reply

Exit mobile version