Close Menu
    What's Hot

    தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»“அன்றே எங்கள் வாழ்வு முடிந்துவிட்டது…” லெப்டினன்ட் வினய் நர்வாலினை நினைத்து தந்தை உருக்கம்!.
    இந்தியா

    “அன்றே எங்கள் வாழ்வு முடிந்துவிட்டது…” லெப்டினன்ட் வினய் நர்வாலினை நினைத்து தந்தை உருக்கம்!.

    Editor web3By Editor web3April 22, 2026Updated:April 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vinay Narwal father
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த ஆண்டு பகல்காமில் நடந்த அந்த கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால், லெப்டினன்ட் வினய் நர்வாலின் குடும்பத்திற்கு மட்டும் காலம் அப்படியே உறைந்து நிற்கிறது. கனவுகள் பல சுமந்து, நாட்டுக்காகச் சேவையாற்றத் துடித்த ஒரு இளம் கடற்படை அதிகாரி, தனது தேனிலவின் போது காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட அந்தத் துயரம் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.

    கடந்த 2025 ஏப்ரல் 22-ம் தேதி, தனது 26-வது வயதில் வினய் நர்வால் வீரமரணமடைந்தார். ஏப்ரல் 16-ம் தேதி தான் அவருக்குத் திருமணம் நடந்திருந்தது. திருமண வரவேற்பு முடிந்த மூன்றே நாட்களில், புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியவர், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார். அந்தச் செய்தியைக் கேட்ட அன்றே எங்கள் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. இப்போது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான்” என அவரது தந்தை ராஜேஷ் நர்வால் வேதனையுடன் கூறுகிறார்.

    வினய் நர்வால் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தனது இலட்சியங்கள் மற்றும் குடும்பத்திற்கான ஆசைகளை எழுதி வைத்திருந்ததாக அவரது தந்தை நினைவு கூர்கிறார். “சிறு வயதிலேயே அதிகாரி ஆக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் வெறும் மகன் மட்டுமல்ல, எங்களுக்கு ஒரு தேவதூதன் போல இருந்தார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராஜேஷ். சிறு வயதில் வினய் தன் விரலைப் பிடித்து நடந்த முதல் நடையை எண்ணிப் பார்க்கும்போது, அந்தத் தந்தையின் கண்கள் கலங்குகின்றன.

    வான்படையில் சேர விரும்பி, பின்னர் கடற்படையில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற வினய், ராணுவப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டுக்காகச் சேவையாற்றுவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். தற்போது அவரது மனைவி இமான்ஷி, சகோதரி மற்றும் தாத்தா-பாட்டி என அனைவரும் அந்தப் பெரிய இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இந்தச் சோகத்திலும் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூலூரில் திமுகவின் கரூர் கும்பல் பணப்பட்டுவாடா!. தவெகவினர் சாலை மறியல்!
    Next Article உதயநிதி தொகுதியில் தேர்தல் முறைகேடு – தவெக வேட்பாளர் குற்றச்சாட்டு
    Editor web3
    • Website

    Related Posts

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    August 4, 2026

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    August 4, 2026

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!

    உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.