ஜனநாயகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் கானாவில் இருப்பதை பாக்கியமாக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
கானா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ஜனநாயகம் என்பது வெறும் ஒரு கட்டமைப்பு அல்ல என்றும், அது ஒரு கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு சவால்களையும் கண்ணியத்துடன் எதிர்கொள்ளும் வகையில் கானா துணிச்சலுடன் செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
தமக்கு அளிக்கப்பட்ட கானாவின் தேசிய விருதை பெற்றது ஆழமான நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
மேலும், விருதை வழங்கிய கானா மக்களுக்கு தமது நன்றியை கூறிக்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கானா ஒரு தங்க பூமி என்றும், இங்குள்ள மக்கள், இதயத்தில் உள்ள அரவணைப்பு மற்றும் வலிமைக்கு சான்றாக இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
இதையும் படிக்க: புது கணவன்களை குறிவைக்கும் புது மனைவிகள்… பீகாரில் மேலும் ஒரு சம்பவம்…
கானா நாடாளுன்றத்தில் உரையாற்றுவது பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா – கானா இடையேயான உறவுகள் நீடித்து வலிமையாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்தார்.