பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோரிவரும் பலுசிஸ்தான் பகுதி, ஆகஸ்ட் 11-ஆம் தேதியை தங்களின் சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 11-ஐ தேர்ந்தெடுத்துள்ள பலுச் அமைப்புகள், உலக நாடுகள் தங்களை ஒரு சுதந்திரத் தனி நாமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

‘குடியரசுப் பலுசிஸ்தான்’ (Republic of Balochistan) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பலுச் மக்கள் தங்கள் வீடுகள், சந்தைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுதந்திர பலுசிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி, இந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என பலுச் சுதந்திர இயக்கத் தலைவர் மீர் யார் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து விடுதலை பெற்ற போது, பலுசிஸ்தான் முதல்முறையாக கடந்த 1947 ஆகஸ்ட் 11 அன்று தனது சுதந்திரத்தை அறிவித்தது. அந்த வரலாற்றுச் சிறப்பைக் குறிக்கும் விதமாகவே இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பலுச் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானின் தவறான கொள்கைகளாலும் ராணுவ நடவடிக்கைகளாலும் அப்பகுதி நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பலுச் அமைப்புகள், சர்வதேச சமூகமும் இந்தியாவும் பலுசிஸ்தானின் சுதந்திரத்தை ஏற்று ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

பாகிஸ்தான் அரசாங்கம் ஆகஸ்ட் 14-ம் தேதியைக் சுதந்திர தினமாகக் கொண்டாடும் நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பலுசிஸ்தான் தரப்பில் இருந்து சுதந்திர தின அறிவிப்பு வெளியாகியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version