Close Menu
    What's Hot

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!
    உலகம்

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    Editor web3By Editor web3June 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    srilanka fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கையின் கொழும்பு அருகே உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி  12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கழுதாரா மாவட்டத்தின் அங்குருவாதொட்ட  பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற முதியவர்கள் தங்கியிருக்கும் இந்த இல்லத்தில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் ஒரு பகுதியில் பிடித்த தீ, அடுத்தடுத்து மற்ற அறைகளுக்கும் அதிவேகமாகப் பரவியது.

    தீ விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. இதில் தீக்காயங்கள் ஏற்பட்டு 11 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மீட்புத்துறையினர் கட்டடத்திற்குள் அதிரடியாகப் புகுந்து, தீயில் சிக்கியிருந்த 51 பேரைப் பாதுகாப்பாக மீட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. மேலும் 9 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த முதியோர் இல்லத்தில் மொத்தம் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நிலையில், போலீஸாரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு
    Next Article “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி
    Editor web3
    • Website

    Related Posts

    பிரிட்டன் கடற்படை பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து..! 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

    June 4, 2026

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    June 3, 2026

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.