ஈரானின் கடற்படை “முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது” என்றும், அதன் விமானப்படைத் திறன்கள் கடுமையாகப் பலவீனமடைந்துவிட்டன என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்,. கடந்த 2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், நிலத்தடி அணுசக்தி மையங்கள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துவிட்டதாக அவர் தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், நிலைமை பதற்றமாகவே உள்ளது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதற்கு “மிகவும் வாய்ப்பில்லை” என டிரம்ப் குறிப்பிட்டார். அதே சமயம், இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ஈரான் கலந்துகொள்ளுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version