ஈரான் – இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய கிழக்கில் ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தங்கள் அணு ஆயுத திட்டம் அமைதி நோக்கத்துக்கானவை என ஈரான் சமாதானம் கூறி வருகிறது. எனினும் அதனை உலக நாடுகள் நம்புவதாக இல்லை. ஈரானை அணு ஆயுதம் தயாரிக்காமல் நிறுத்தி வைக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.

அதேநேரம் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு விசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரானுக்கு என்ன தேவையோ அதை பொறுத்து செய்வோம். பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version