நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சத்தை பெற்றிருந்தது. ஆகையால் அடுத்தப் படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டராக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவரது 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியான முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் மற்றும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ’சிக்கிட்டு’ என்ற பாடல் வரும் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோவில் அனிரூத் மாஸான எண்ட்ரீ கொடுக்க, அவரை சாண்டி மாஸ்டர் கலாய்க்கும் படியாக அமைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version