Close Menu
    What's Hot

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்….. மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் முதல் செய்தி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»வட்டியை குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி
    உலகம்

    வட்டியை குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fed bank
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்​கா​வின் மத்​திய வங்​கி, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்​துள்​ளது. அந்த நாட்​டில் ஒரே ஆண்​டில் 3-வது முறை​யாக வட்டி விகிதம் குறைக்​கப்​பட்​டிருக்​கிறது.

    அமெரிக்க மத்​திய வங்​கி​யின் (எப்​இடி) உயர்​நிலை கூட்​டம் கடந்த இரு நாட்​களாக வாஷிங்​டனில் நடை​பெற்​றது. எப்​இடி தலை​வர் ஜெரோம் பாவெல், துணைத் தலை​வர் ஜெபர்​சன் மற்​றும் கவர்​னர்​கள் உட்பட 12 பேர் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

    இதில் விலை​வாசி உயர்​வு, வேலை​வாய்ப் ​பின்​மையை கருத்​தில் கொண்டு வட்டி விகிதத்தை குறைக்க எப்​இடி தலை​வர் ஜெரோம் உட்பட 9 பேர் ஆதரவு அளித்​தனர். 3 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறு​தி​யில் பெரும்​பான்மை உறுப்​பினர்​களின் ஆதர​வின்​படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்​டது.

    இதுகுறித்து அமெரிக்க மத்​திய வங்​கி​யின் தலை​வர் ஜெரோம் பாவெல், வாஷிங்​டனில் நேற்று நிருபர்​களிடம் கூறும்​போது, “வேலை​வாய்ப்​பு​களை பெருக்​க​வும், அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலையை நிலைப்​படுத்​த​வும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்​திருக்​கிறோம். இதன்​படி அமெரிக்க மத்​திய வங்கி​யின் வட்டி விகிதம் 3.50 சதவீதம் முதல் 3.75 சதவீதம் என்ற வரம்​பில் இருக்​கும்” என்றார்.

    அமெரிக்​கா​வில் கடந்த செப்​டம்​பரில் வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்​டது. இதன்​பிறகு கடந்த நவம்​பரில் 0.50 சதவீதம் குறைக்​கப்​பட்​டது. தற்​போது 3-வது முறை​யாக வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்டு இருக்​கிறது. இந்த ஆண்​டில் மட்​டும் 3 முறை வட்டி விகிதம் குறைக்​கப்​பட்டு உள்​ளது.

    இந்​தி​யா​வுக்கு சாதகம்: இதுதொடர்​பாக சர்​வ​தேச பொருளா​தார நிபுணர்​கள் கூறும்​போது, “அமெரிக்க மத்​திய வங்​கி​யின் வட்டி விகித குறைப்​பால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது. இது இந்​திய ரூபாய் உட்பட பல்​வேறு நாடுகளின் கரன்​சிகளுக்கு சாதக​மாக அமை​யும்.

    தங்​கம், வெள்ளி விலை​யில் மாற்​றங்​கள் ஏற்​படும். அமெரிக்க மத்​திய வங்கி​யின் வட்டி குறைப்​பால் இந்​தியா உள்​ளிட்ட நாடு​களில் அந்நிய முதலீடு அதி​கரிக்​க வாய்ப்​பு இருக்​கிறது” என்​று தெரிவித்தனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய கனரக பேருந்து – பாரத் பென்ஸ் அறி​முகம்
    Next Article பள்ளி பாடத்திட்டத்தில் பறை இசையை கொண்டுவர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
    Editor TN Talks

    Related Posts

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    July 19, 2026

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    July 18, 2026

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்….. மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் முதல் செய்தி!

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ; வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்து – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    BLASTU.. BLASTU..!! களைகட்டும் ‘ஜனநாயகன்’ திருவிழா..!! திருப்பூரில் டி-ஷர்ட்-க்கு குவியும் ஆர்டர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.