கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், வெளியே சென்று வரும் பலருக்கும் முகத்தில் எரிச்சல், சிவந்து போதல் மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற்று, முகத்தைச் சட்டுனு குளிர்ச்சியாக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வெயிலால் ஏற்படும் முக எரிச்சலைத் தணிக்க கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். இயற்கையான கற்றாழை ஜெல்லினை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவினால், தோலில் உள்ள வெப்பம் நீங்கி முகம் உடனடியாகக் குளிர்ச்சியடையும். அதேபோல், வெள்ளரிக்காய் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் தடவி வரலாம். இது முகத்திற்குத் தேவையான நீர்ச்சத்தை அளிப்பதோடு, வெயிலால் ஏற்பட்ட கருமையையும் (Tan) நீக்க உதவும்.
மற்றொரு சிறந்த வழிமுறை தயிர் அல்லது மோர் பயன்படுத்துவதாகும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு இதமளிப்பதோடு, எரிச்சலைச் சட்டுனு குறைக்கும். மேலும், ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் கலந்த பேக் போடுவதன் மூலம் முகத்தில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றலாம். ஒருவேளை எரிச்சல் மிக அதிகமாக இருந்தால், ஒரு மெல்லிய துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து மென்மையாக ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடனடி நிவாரணம் பெறலாம்.
