பெரியார் ஏற்றி வைத்த சமூக நீதி என்னும் பெரும் நெருப்பு இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருப்பதாக கூறி திமுக சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக வெளியிட்ட “சமூக நீதி எனும் பெரு நெருப்பு” என்ற குறும்படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ஏற்றிய சமூக நீதி எனும் பெரும் நெருப்பு இன்னும் சுடர் விட்டு எரிந்து கொண்டு வருகிறது. இந்த பெரும் நெருப்பு அணைந்துவிடும் என இன எதிரிகள் நினைத்த போது, சமூக நீதி சுடரை பெரியாரிடம் இருந்து பேரறிஞர் அண்ணா எடுத்து கொண்டு ஆட்சி அமைத்தார்.
அண்ணாவின் ஆட்சி விரைவில் முடிந்து விட, சமூக நீதி நெருப்பு மேலும் அனைந்திடும் என இன எதிரிகள் நினைத்தனர். ஆனால், அதை சுக்கு நூறாக உடைத்த கருணாநிதி, எளியவர்களுக்கு நம்பிக்கையாகவும், ஒளியாகவும் அண்ணா சந்த சமூக நீதி சுடரை கையில் வாங்கினார்.
இந்த நிலையில் அண்ணா வழியில் சமூக நீதியை கருணாநிதியை தொடர்ந்து 2.0 என்ற நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து செல்கிறார். இவர் தமிழ்நாட்டின் சமூக நீதியை முன்னிநின்று பாதுகாப்பு இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்” என ஏஐ உருவாக்கிய வீடியோ கவனத்தை பெற்றுள்ளது.