புதிய அமைச்சரவையில் இடம்பெற போகும் அமைச்சர்கள் இவர்கள்தான் என தவெக அமைச்சர்கள் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய், ஒருபக்கம் பெரும்பான்மைக்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதே நேரம் தவெகவில் இவர்கள்தான் அமைச்சராக இருக்கிறார்கள் என பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த பட்டியலில், தவெக பொதுச்செயலர் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும்
அருண்ராஜ், விஜய்சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், திருப்பூர் சத்தியபாமா, விஜயலட்சுமி, தாயிரா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
