ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட துயரமான விபத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரி உயிரிழந்தது தமிழ் திரைப்படத் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுகொண்டிருந்தபோது, ஜோத்பூர்  அருகே ஏற்பட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் சம்பவம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், திரைப்படத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.பி. செளத்ரி தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராக திகழ்ந்தவர். தனது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல வெற்றிப்படங்களை வழங்கியவர். குறிப்பாக குடும்பம், உணர்ச்சி, மற்றும் வணிக அம்சங்கள் கலந்த படங்களை தயாரிப்பதில் அவர் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியிருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளத்தில் 99 படங்களை தயாரித்தவர் பல புது முகங்களை அறிமுகப்படுத்தியவர்.

அவர் தயாரித்த முக்கியமான தமிழ் திரைப்படங்களில் சூரியன், பூவே உனக்காக, நாட்டாமை, மேட்டுக்குடி, லவ் டுடே, திருப்பாச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

பல தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் தனது பங்களிப்பை வழங்கிய ஆர்.பி. செளத்ரியின் மறைவு, அந்தத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது இறுதி சடங்குகள் குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆர்.பி. செளத்ரி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version