டந்த  2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அன்வர் ராஜா, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் முகமது ஜலீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய அன்வர் ராஜாவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேசமயம், 2014 தேர்தலைத் தொடர்ந்து 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களும் நடைபெற்றுவிட்டதால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதால் எந்த நடைமுறைப் பயனும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், சட்டப்படி தேவையான அடுத்தகட்ட உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி, திமுக வேட்பாளர் முகமது ஜலீல் தாக்கல் செய்த தேர்தல் மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version