வெளிநாடு பயணங்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஈர்த்த முதலீடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டு திமுக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெற்றுள்ளன. வெளிநாட்டு பயணங்கள் மூலம் இதுவரை 922 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம் சுமார் 32 லட்சத்து 31 ஆயிரத்து 32 பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்ட முதலமைச்சர் அமெரிக்காவில் மட்டும் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
தொடர்ந்து ஸ்பெயின் பயணத்தின் போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஜப்பான் பயணத்தின் போது மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஐக்கிய அரபு அமீரகம் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சிங்கப்பூர் பயணத்தின் போது ஒரு புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மொத்தமாக ஆறு நாட்களுக்கு மேற்கொண பயணத்தால் 36 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.18,498 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தியும் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளனர்.