புதுச்சேரி முதலமைச்சரான என்.ரங்கசாமி இன்று காலை மீண்டும் பதவி ஏற்கிறார். அவருக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறாா்.

30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக1, லட்சிய ஜனநாயகக் கட்சி 1 இடங்களைக் கைப்பற்றியது. முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ள தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றினை அவா் ராஜினாமா செய்கிறார்.

என்.ஆர்.ரங்கசாமி தலைமையிலான புதிய அரசின் பதவியேற்புவிழா இன்று காலை 9.47 மணிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா் மாளிகையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மற்றும் மற்றும் சில அமைச்சா்களுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறாா்.

பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனர்.

ரங்கசாமி கடந்த முறை புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றபோது முதியோா் உதவித்தொகையை மேலும் ரூ.500 உயர்த்தும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
இந்த முறை, அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ள பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் கோப்பில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version