அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என ஒரு பிரிவும், எஸ்.பி.வேலுமணிதான் என மற்றொரு பிரிவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளது.

இதில் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள தனக்கு அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், சி.வி.சண்முகம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கடிதம் அளித்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவுதான் அதிமுக சட்டமன்ற தலைவர் யார் என்பதை இறுதி செய்யும்.

ஒருவேளை எடப்பாடி தரப்புக்கு ஆதரவான முடிவாக இருந்தால், அதிமுக கொறடா உத்தரவுப்படி அனைத்து எம்.எல்.ஏக்களும் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஒருவேளை அதனை மீறினால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி, அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் நிலை வரலாம்.

எஸ்.பி.வேலுமணிதான் அதிமுக சட்டமன்ற தலைவர் என சபாநாயகர் தெரிவித்தால், அதிமுக எம்.எல்.ஏக்களில் பெரும்பாலோர் தவெகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை சபாநாயகர் எந்தமுடிவுமே எடுக்காவிட்டால், விதிப்படி கட்சியின் கொறடா எடுக்கும் முடிவுக்கு எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயலாம்.

மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதாவது 32 எம்.எல்.ஏக்கள் ஒன்றினைந்து தவெகவுக்கு ஆதரவு அளித்தால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது இன்று தெரிந்துவிடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version