Close Menu
    What's Hot

    “அன்றே எங்கள் வாழ்வு முடிந்துவிட்டது…” லெப்டினன்ட் வினய் நர்வாலின் நினைத்து தந்தை உருக்கம்!.

    சூலூரில் திமுகவின் கரூர் கும்பல் பணப்பட்டுவாடா!. தவெகவினர் சாலை மறியல்!

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு
    அரசியல்

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    ஈரோடு மாவட்டம்  மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவகுமார் குற்ற வழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என  தேர்தல் அதிகாரியான ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன் மற்றும் சென்னிமலை மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.சதீஷ் ஆகியோர்  அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வேட்பாளர்கள் தங்கள் மீதான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் படிவம் 26-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், கிருத்திகா சிவகுமார் தாக்கல் செய்துள்ள சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் 4 மற்றும் 5-வது பக்கங்களில் தன் மீது எந்தக் குற்றவியல் வழக்கும் இல்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    உண்மையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 06-07-2025 அன்று அவர் மீது குற்ற எண்: 371/2025-ன் கீழ் பி.என்.எஸ் பிரிவு 318(4) மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2010-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கிருத்திகா சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் ‘இந்தியன் பப்ளிக் பள்ளி’ எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக இயங்கியது தொடர்பாகவும், பெற்றோர்களை ஏமாற்றி போலி மாற்றுச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாகவும் இந்த வழக்கு பதிவாகியுள்ளது.

    மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் இவ்வழக்கில் 8 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தந்து, திட்டமிட்டு குற்ற வழக்குகளை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ள கிருத்திகா சிவகுமாரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 125A-ன் படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
    Next Article வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!
    Editor TN Talks

    Related Posts

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அன்றே எங்கள் வாழ்வு முடிந்துவிட்டது…” லெப்டினன்ட் வினய் நர்வாலின் நினைத்து தந்தை உருக்கம்!.

    சூலூரில் திமுகவின் கரூர் கும்பல் பணப்பட்டுவாடா!. தவெகவினர் சாலை மறியல்!

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    April 22, 2026

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.