உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உரையாற்றி வருகிறார். தொகுதிக்குள் உள்ள பிரச்னைகள், உட்கட்சி மோதல்கள், மாற்றுக்கட்சியினரின் வலிமை, மக்களின் மனவோட்டம் ஆகியவை குறித்து நேரடியாக தகவல்களை பெற்று வருகிறார்.

அந்தவகையில் இன்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீண்டும் இந்த நிர்வாகிகள் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை இந்த முறை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம் திமுகவினருக்கு வாய்ப்பு கொடுங்கள் முதலமைச்சரிடம் ஸ்ரீபெரும்புதூர் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த முறை அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்க கூடாது திமுகவிற்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version