செக் குடியரசு நாட்டில் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இப்போட்டில் முதல் வாய்ப்பில் பவுல் செய்து அதிர்ச்சியளித்தார் நீரஜ்.

இரண்டாம் வாய்ப்பில் 83.45மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்தவர், மூன்றாவது வாய்ப்பில் 85.29மீட்டர் தூரமும், 4-வது வாய்ப்பில் 82.17மீட்டரும், 5-வது வாய்ப்பில் 81.01 மீட்டர் தூரமும் எறிந்தார். இறுதி வாய்ப்பிலும் பவுல் செய்தார் நீரஜ்.

இதன் மூலம் மற்றவர்களைவிட அதிகபட்சமாக அதிகபட்சமாக மூன்றாவது வாய்ப்பில் 85.29 மீட்டர் எறிந்த இவர், முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். அதே போல் 6 வாய்புகளில் 2 வாய்ப்புகளை தவறவிட்ட தென்ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த தவ் ஸ்மித் அதிகபட்சமாக 84.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் அனைத்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் 83.63 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடம் பிடித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version