சமீபகாலமாக படிப்பு என்றாலே மாணவர்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது. அத்தோடு படிக்கச் சொன்னாலோ, அல்லது செல்போனில் கேம் விளையாட வேண்டாம் என்றாலோ தற்கொலை செய்து கொள்வதும், விபரீத செயல்களில் ஈடுபடுவதாக பல சம்பவங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில் நெல்லையில் கல்லூரிக்கு போக சொன்ன தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கப்பாண்டி(19) பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், ஆகையால் கல்லூரிக்கு செல் என தங்கப்பாண்டியை மாரியப்பன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி, தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத்ஹனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தங்கப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.