நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் தோனி நேரில் கண்டு களித்தார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர்.
இதில் ஜோகோவிச் 6-3, 7-5, 3-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் அவர் அல்காரஸுடன் மோதவுள்ளார். இந்த நிலையில், ஜோகோவிச் விளையாடிய காலிறுதி போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நேரில் கண்டு களித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.