Close Menu
    What's Hot

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»1,000-வது ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான்!. அறிமுக வீரர் அசத்தல்!
    விளையாட்டு

    1,000-வது ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான்!. அறிமுக வீரர் அசத்தல்!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pakistan 1000 ODI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் அணி நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், தனது 1,000-வது ஒருநாள் போட்டியில் விளையாடி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவரில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். மேட் ரென்ஷா நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் அராபத் மினாஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார அகமது 2 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராப், சல்மான் ஆகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம், காஜி கோரி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 69 ரன்னும், காஜி கோரி 65 ரன்னும் எடுத்தனர். இறுதியில், பாகிஸ்தான் 42.3 ஓவரில் 205 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றிபெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது..

    இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் அணி நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், தனது 1,000-வது ஒருநாள் போட்டியில் விளையாடி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

    கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மட்டுமே 1,000 ஒருநாள் போட்டிகள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியிருந்த நிலையில், தற்போது அந்தப் புகழ்பெற்ற பட்டியலில் 3-வது நாடாக பாகிஸ்தானும் இணைந்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இந்த 1,000-வது வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், மற்றொரு அசாத்திய சாதனையும் அரங்கேறியுள்ளது. இப்போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராகக் களமிறங்கிய 21 வயதான இளம் பந்துவீச்சாளர் அரஃபாத் மின்ஹாஸ், ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையைத் திணறடித்தார். மிக நேர்த்தியாகப் பந்துவீசிய அவர், தனது 10 ஓவர்களில் வெறும் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

    இதன்மூலம், தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை அரஃபாத் மின்ஹாஸ் தன்வசப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு இது 1,000-வது போட்டி என்ற பெருமை ஒருபுறமிருக்க, அறிமுக வீரரின் இந்த அசாத்திய பந்துவீச்சு அந்த நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் இரட்டிப்பு மகிழ்ச்சியையும், புதிய சாதனையும் தேடித்தந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleT20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.
    Next Article தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!
    Editor web3
    • Website

    Related Posts

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    பிரெஞ்சு ஓபன் : 5மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற போட்டி..! இறுதியில் வென்ற ஜூவான் மேனுவல்..!

    May 31, 2026

    RCB-க்கு அடிக்குமா மெகா லக்? 2011 முதல் தொடரும் ‘குவாலிபையர் 1’ மேஜிக் சென்டிமென்ட்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    10 மணி நேரமாக பேருந்து இல்லை ; மதுரையில் பயணிகள்  கொந்தளிப்பு – சாலை மறியல்

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.