Close Menu
    What's Hot

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் தப்பியோட்டம்: போலீஸ் தேடுதல் வேட்டை!
    தமிழ்நாடு

    செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் தப்பியோட்டம்: போலீஸ் தேடுதல் வேட்டை!

    Editor web1By Editor web1July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 13 08h43m34s563
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட சிறார்கள் இந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவில் அங்கு பணியிலிருந்த வார்டன் மற்றும் வாயில்காவலர்களை திடீரென தாக்கிய 12 சிறார்கள், காவலில் இருந்து தப்பி ஓடினர்.

    பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பிய சிறார்கள், அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போன்கள், பணம் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இல்லத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் அவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாதுகாப்பு இல்ல அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். சிறார்கள் தப்பியோடியதன் பின்னணியில் ஏதேனும் முன்திட்டமிடல் உள்ளதா, அவர்கள் எந்த திசையை நோக்கிச் சென்றனர் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    தப்பியோடிய சிறார்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, இரவு நேரத்தில் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சென்னை வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் சென்ற அரசுப் பேருந்துகளிலும் காவல்துறையினர் இறங்கி முழுமையான சோதனையில் ஈடுபட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த ஜானிக் சின்னர்..!
    Next Article வயநாடு கல்லாடி நிலச்சரிவு: மாயமான இமாச்சலப் பிரதேச நபரின் உடல் மீட்பு – தேடுதல் பணி நிறைவு!
    Editor web1
    • Website

    Related Posts

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    July 13, 2026

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    July 13, 2026

    எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

    வயநாடு கல்லாடி நிலச்சரிவு: மாயமான இமாச்சலப் பிரதேச நபரின் உடல் மீட்பு – தேடுதல் பணி நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.