அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தொகுதி வாரியாக அவர்களிடம் இபிஎஸ் நேர்காணல் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக நேற்று எடப்பாடி பழனிசாமி நேர்க்காணல் நடத்தினார். 3வது நாளாக இன்று, விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்திவருகிறார்.

அப்போது, நேர்காணலுக்கு வந்தவர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று கூட்டணிக்குள் வரவுள்ளது. நம்பிக்கையோடு இருங்கள். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அதிமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version