சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்பமனு விநியோகம், வேட்பாளர்களை தேர்வு செய்வது, களப்பணிகளுக்கான குழுக்களை அமைப்பது தொடர்பான பணிகள் முழு வேகமெடுத்துள்ளன.

கொங்கு மண்டலம் என்பது தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல் போன்ற 10 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டங்கள் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதன் காரணமாகவே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி இன்றைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரை சூளுரைத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும், 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும் வலுவான எதிர்க்கட்சியாக அமர இந்த கொங்கு மண்டலம் தான் மிக முக்கிய பங்கு வகித்தது.

கொங்கு மண்டலம் எப்படி அதிமுகவிற்கு கோட்டையோ, அதேபோல தான் சேலம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. அப்படியிருக்கையில், சேலம் ஆத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் ராஜ்ய சபா எம்.பி. சிவலிங்கம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். ஆத்தூர் தொகுதியில் 2011-2016 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version