Close Menu
    What's Hot

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!
    தமிழ்நாடு

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    Editor web3By Editor web3April 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vanathi annamalai bike raid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனை தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அண்ணாமலை இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானதி சீனிவாசன், தற்போது குணமடைந்து மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அண்ணாமலையுடன் இணைந்து மேற்கொண்ட இந்தப் பயணம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜகவினர் இடையே பனிப்போர் நிலவுவதாகக் கூறப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்ணாமலை ஸ்கூட்டரை ஓட்ட, அதன் பின்னால் வானதி சீனிவாசன் அமர்ந்து கொண்டு வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். கணபதி சிவசக்தி காலனியில் தொடங்கிய இந்தப் பேரணி, பாரதி நகர், விளாங்குறிச்சி சாலை, மணியகாரம்பாளையம், சாய்பாபா காலனி உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக வடவள்ளி பேருந்து நிலையம் வரை சென்றது. திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவும் கோவையில், இந்த ‘பைக் பிரச்சாரம்’ பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று, பாஜக தனது பலத்தைக் காட்டும் விதமாக இந்தப் பேரணியை ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!
    Next Article வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    June 21, 2026

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.