அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் ஆட்சி அமைப்பதில் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான விவாதங்கள் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், கட்சியின் மற்றுமொரு முக்கியத் தூணான எஸ்.பி. வேலுமணியுடன் அவர் நடத்தியுள்ள இந்தத் தனிப்பட்ட சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எம்.எல்.ஏ-க்கள் யாரும் வராத சூழலில், இந்த இரு மூத்த தலைவர்களின் ஆலோசனை அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version