2026 தேர்தலுக்கான அறிவிப்புகளை விஜய் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் நிலையில், திட்டமிட்டப்படி நாளைமுதல் தவெக தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் திவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் முதல்முதலாக தேர்தலில் களம்காணும் விஜய்யும் தனது கட்சி பணிகளில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே, கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், மாமல்லபுரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை விஜய் அறிவித்திருந்தார்.

ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும், அரசியல் பணிகளில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில், திட்டமிட்டப்படி நாளைமுதல் தவெக தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் என்று விஜய் அறிவித்துள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தப் பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெக-வில் இணைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன், மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா மற்றும் கே.ஜி. அருண்ராஜ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் முன்னிலை வகிக்க உள்ளனர்.

ந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே அழைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கழகச் செயல்வீரர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version