ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது இன்று மாலைக்குள் வெடிக்கும் என்று இமெயில் மூலம் மாவட்ட ஆட்சியரின் அலுவலக முகவரிக்கு ஈமெயில் ஒன்று வந்துள்ளது..

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மோப்பநாய் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஓரு ஓரு பகுதியிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டாவது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version