Close Menu
    What's Hot

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மக்களின் கொந்தளிப்பை மடைமாற்றவே என்மீது கேலிச்சித்திரம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
    தமிழ்நாடு

    மக்களின் கொந்தளிப்பை மடைமாற்றவே என்மீது கேலிச்சித்திரம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 21, 2025Updated:June 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250621 WA0005
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை திசை திருப்பவே தன்னைப் பற்றி கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் வரும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, “தாய்மொழி அனைவருக்கும் முக்கியம். தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற பொறுப்பில்தான் அமித் ஷா பேசியிருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு என்றும் அவர் கூறினார்.

    கீழடி அகழாய்வு குறித்த கேள்விகளுக்கு, அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். “அ.தி.மு.க. ஆட்சியில் கீழடி அகழாய்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக” அவர் குறிப்பிட்டார்.

    மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, “ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்பும் கடவுளை, மாநாட்டின் மூலமாக ஆண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று அவர் கூறினார்.

    தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுவது குறித்த கேள்விக்கு, “நாங்கள் ஏற்கனவே இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளோம். தி.மு.க.வைப் பொறுத்தவரை மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் திசை திருப்புவதற்காக, இப்படி கேலிச்சித்திரம், அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும், “2026 சட்டமன்றத் தேர்தலில் இதற்கான பதில் கிடைக்கும் என்றும், மக்கள் இதற்கான தக்க தண்டனை வழங்குவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சர்வதேச யோகா தினம் குறித்த கேள்விக்கு, “யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாரதப் பிரதமர் முன்னின்று நடத்துகிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    AIADMK Amit Shah Caricature DMK Edappadi Palaniswami Keeladi Mother Tongue Murugan Devotees Conference Tamil Nadu Politics Yoga Day அ.தி.மு.க அமித் ஷா எடப்பாடி பழனிசாமி கீழடி கேலிச்சித்திரம் தமிழக அரசியல் தாய்மொழி தி.மு.க முருக பக்தர்கள் மாநாடு யோகா தினம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவார இறுதியில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
    Next Article முதல்வர் மருந்தகம் குறித்து நாளிதழில் வெளியான தவறான செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு!
    Editor TN Talks

    Related Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    May 19, 2026

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.