ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.3,600 வரை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் ஏற்றத்தை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,800 க்கு விற்பனையானது.

காலையில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை மாலை ஜெட்வேகத்தில் எகிறியது. மாலை பங்கு சந்தை முடியும் போது ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.290 வரை தங்கம் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கடுமையான விலை உயர்வால் நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்கத்துக்கு போட்டியாக வெளியின் விலையும் கடுமையாக உய்ரந்துள்ளது வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.340க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளிக்கு ரூ. 22,000 வரை உயர்ந்து ரூ.3,40,000க்கு விற்பனையாகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version