தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் பயன்பாட்டிற்காகப் புதிதாக வாங்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் ‘பொலிரோ’ (Bolero) காரை, முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்து, அவரே ஸ்டீயரிங்கைப் பிடித்து ஓட்டிப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பதிவில், மக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில், மருத்துவத் துறைக்கு இந்த புதிய வாகனங்கள் அர்ப்பணிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரே அதனை ஓட்டிப் பரிசோதித்தது அதிகாரிகளிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
https://x.com/anandmahindra/status/2057076164796305681
எளிமையான, அதே சமயம் மிகவும் உறுதியான ‘மஹிந்திரா பொலிரோ’ தான், நான் ஓட்டுவதற்கு மிகவும் விரும்பும் கார் என்று பலமுறை நான் வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன். இப்போது தமிழக முதலமைச்சரும் அதே காரை தேர்ந்தெடுத்து, அதை அவரே ஓட்டிப் பார்ப்பதைக் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது என்று நெகிச்சியுடன் தெரிவித்துள்ளார்.
