Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவலர் அஜித் குமார் கொலை வழக்கு.. ₹ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
    தமிழ்நாடு

    காவலர் அஜித் குமார் கொலை வழக்கு.. ₹ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250722 WA0007
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

     

    இந்தக் கொலை வழக்கு தற்போது சிபிஐ வசம் உள்ளது. முன்னதாக, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு என்னென்ன உதவிகள் செய்துள்ளது என்பது குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

     

    இன்று (ஜூலை 22, 2025), நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் மரியா கிளாட் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக ₹7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

     

    இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள்:

     

    வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்திஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரிய மனுவை முதன்மை நீதித்துறை நடுவர் 7 நாட்களுக்குள் விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

     

    தமிழக அரசு ₹7.5 லட்சம் இழப்பீடாகவும், அரசு வேலை மற்றும் இலவச வீட்டுமனை ஆகியவற்றை வழங்கியுள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே, அரசு தரப்பில் ₹25 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட அஜித்தின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

     

    அரசு தரப்பில் இந்த வழக்கில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Ajith Kumar CBI compensation High Court Interim Relief Madapuram Madurai Bench Murder Case police Tamil Nadu government Temple Guard Witness protection அஜித் குமார் இடைக்கால நிவாரணம் இழப்பீடு உயர் நீதிமன்றம் காவல்துறை கொலை வழக்கு கோவில் காவலர் சாட்சிகள் பாதுகாப்பு சிபிஐ தமிழ்நாடு அரசு மடப்புரம் மதுரை கிளை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரண்டு மடங்கு அதிகரித்த தக்காளி விலை.. ரூ.50-க்கு விற்பனை!
    Next Article “பாசிசமும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்”… அதிமுக போஸ்டருக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.