பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு ‘பொங்கி வழிதல், பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசி இட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.

இந்தாண்டு பொங்கல் 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  கிராமப்புறங்களில் மக்கள் இந்த தைப்பொங்கலைத் திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில் பொங்கலைச் செய்வார்கள்.

அந்தப் பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும். எனவே இந்த நன்னாளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.

அதாவது ஒற்றை பானையில் பொங்கல் வைக்கக்கூடாது. பால் பொங்கல், சர்க்கரை பொங்கல் என 2 பொங்கல் வைக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பொங்கல் வைத்து அதனை குப்பையில் போடக்கூடாது. அசைவம் சாப்பிடக்கூடாது. பொங்கல் பானையை அடுப்பில் வைக்கும்போது வெறும் பானையாக வைக்கக்கூடாது. கொஞ்சம் பாலும், தண்ணீரும் ஊற்றில் அடுப்பில் வைக்கலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version