சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
அதன்படி, இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தநிலையில், மேற்காசிய போர் பதற்றத்தால் ப்ரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ப்ரீமியம் வகை பெட்ரோல் 1 லிட்டர் ரூ.149-லிருந்து ரூ.160 ஆகவும், டீசல் ரூ.91.49-லிருந்து ரூ.92.99 என அதிகரித்து விற்பனையாகிறது. அதேபோல், விமான எரிபொருள் விலை 1000 லிட்டருக்கு ரூ.96,638-லிருந்து வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.2.07 லட்சம் என 2 மடங்காக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இதனால் விமான கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version