வருகிற டிசம்பர் 19ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிகணியை வணக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைகணினி ( Tablet) அல்லது மடிக்கணினி ( Laptop ) வழங்கப்படும். ஒவ்வொரு லேப்டாப்பும் இந்திய மதிப்பில் சுமார் 22 ஆயிரம் ரூபாய்க்கு நிகரானது என்று கூறப்படுகிறது.
இந்த இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்று மாதத்திற்குள், அதாவது தேர்தலுக்கு முன்பாகவே குறைந்தது 10 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
