ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.6) பவுனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கெனவே, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்றாடம் விலை உயர்ந்து வருகிறது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜன. 1) தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,640 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,760க்கும், ஒரு சவரன் ரூ.1,02,080க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,71,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிராம் வெள்ளி ரூ. 266க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,66,000க்கும் விற்பனை ஆனது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version