சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் சனிக்கிழமை (ஜன.10)தங்கம் விலை கிராமுக்கு ரூ.ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கும், சவரன் ரூ.1,03,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்றும் (ஜன.12)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 அதிகரித்து ரூ.287,000க்கும், கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version