தங்கம் விலை  இன்று (பிப்.2) சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது.

தாறுமாறாக எகிறி வரும் தங்கம் விலை, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மையால், உலக நாடுகள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதே, இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு, கடந்த வியாழக்கிழமை சவரன் தங்கம் 9,520 ரூபாய் உயர்ந்து, 1,34,400 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் சனிக்கிழமை (ஜன.31) ஒரே நாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது. அதன்படி ஒரு பவுன் ரூ.1,19,200 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் இன்று(பிப்.2) கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1,11,600-க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலை கிலோ ரூ.3 லட்சத்துக்கும், கிராம் ரூ.20 குறைந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version