சென்னையில் இன்று (டிச.15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.720 என விலை உயர்ந்தது. இதன் மூலம் ஒரு லட்ச ரூபாயை தங்கம் விலை நெருங்கி உள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
22 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,08,744 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.83,200-க்கும் விற்பனை ஆகிறது.
