சென்னையில் இன்று (டிச.15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.720 என விலை உயர்ந்தது. இதன் மூலம் ஒரு லட்ச ரூபாயை தங்கம் விலை நெருங்கி உள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,08,744 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.83,200-க்கும் விற்பனை ஆகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version