தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வருடாந்திர விடுமுறையை (Earned Leave) சரண்டர் செய்து பணமாக மாற்றும் முறை மீண்டும் 01.10.2025 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வருடாந்திர விடுமுறையை (Earned Leave) சரண்டர் செய்து பணமாக மாற்றும் முறை மீண்டும் 01.10.2025 முதல் அமல்படுத்தப்படும்.

அதன்படி வருடத்திற்கு 15 நாட்கள் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் நடைமுறை தொடரும். 2020 ஏப்ரல் 27 முதல் 2025 செப்டம்பர் 30 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் சேர்ந்த காலாண்டை (Quarter) அடிப்படையாகக் கொண்டு 2025–26 ல் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சேர்ந்த பணியில் மாதங்கள் மற்றும் தகுதி பெறும் தேதி:

பணியில் சேர்ந்த மாதங்கள் தகுதி பெறும் தேதி
அக்டோபர், நவம்பர், டிசம்பர் 01.10.2025
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 01.01.2026
ஏப்ரல், மே, ஜூன் 01.04.2026
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 01.07.2026

அதேப்போல் 26.04.2020 அல்லது அதற்கு முன்பாக பணியில் சேர்ந்திருந்தும் இதுவரை ஒருமுறையும் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்யாத ஊழியர்களும், தங்கள் சேர்ந்த மாதத்தை பொறுத்து 2025–26 ல் முதல் முறையாக சரண்டர் செய்யலாம்.

அதன்படி பணியில் சேர்ந்த மாதங்கள் மற்றும் தகுதி பெறும் தேதி:

பணியில் சேர்ந்த மாதங்கள் தகுதி பெறும் தேதி
அக்டோபர், நவம்பர், டிசம்பர் 01.10.2025
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 01.01.2026
ஏப்ரல், மே, ஜூன் 01.04.2026
ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 01.07.2026

இந்த உத்தரவு மாநிலத்தின் அனைத்து துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் /சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கும் பொருந்தும்.’ என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version