Close Menu
    What's Hot

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சாலையோர ஆக்கிரமிப்பு அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர்நீதிமன்றம்
    தமிழ்நாடு

    சாலையோர ஆக்கிரமிப்பு அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர்நீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    highcourt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாத விவ​காரத்​தி்ல் நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தாத மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் மற்​றும் டிஜிபிக்கு உத்​தர​வி்ட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், அரசின் துறை​களுக்கு இடையே ஒரு​மித்த எண்​ணம் இல்லை என்​றால் பொது​மக்​களுக்​குத்​தான் பாதிப்பு என குற்​றம் சாட்டி விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

    சென்னை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் தனக்கு சொந்​த​மான நிலத்​தில் வீடு கட்ட பிரமிளா என்​பவர் சிஎம்​டிஏ-​விடம் இரு​முறை தி்ட்ட அங்​கீ​காரம் பெற்​றும் அந்த இடத்​துக்கு செல்​லும் பாதையை சிலர் ஆக்​கிரமித்து இருந்​த​தால் வீட்டை கட்​ட​முடிய​வில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், வீட்​டுக்கு செல்​லும் பாதை​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என கூறி உயர் நீதி​மன்​றத்​தில் பிரமிளா அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்​பன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யன் ஆஜராகி, ‘‘கடந்த 2012-ம் ஆண்டே திட்ட அனு​மதி பெற்று காலா​வ​தி​யாகி விட்​டது.

    மீண்​டும் திட்ட அனு​மதி பெற்​றும் சாலை ஆக்​கிரமிப்பு காரண​மாக இது​வரை வீட்டை கட்ட முடிய​வில்​லை. ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் விவ​காரத்​தில் சென்னை மாநக​ராட்சி மற்​றும் போலீ​ஸார் எந்த ஒத்​துழைப்​பும் வழங்​க​வில்​லை.

    சாலையை ஆக்​கிரமித்​துள்​ளவர்​களின் வீடு​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள மின்​இணைப்பை துண்​டிக்​கும்​படி உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டும் அந்த உத்​தர​வை​யும் அதிகாரிகள் மதிக்​க​வில்​லை’’ என குற்​றம் சாட்​டி​னார்.

    அப்​போது மாநக​ராட்சி தரப்​பில், இந்த பகு​தி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற பாது​காப்பு கோரி போலீ​ஸாருக்கு 4 முறை கடிதம் எழு​தி​யும் எந்த பதி​லும் இல்​லை. போலீ​ஸார் பாது​காப்பு அளித்​தால் மட்​டுமே ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற முடி​யும், என தெரிவிக்​கப்​பட்​டது.

    அதற்கு காவல்​துறை தரப்​பில், மாநக​ராட்சி எழு​திய கடிதங்​களில் எந்த தேதி​யில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும். எவ்​வளவு போலீ​ஸார் பாது​காப்பு அளிக்க வேண்​டுமென எந்த விவர​மும் தெரிவிக்​கப்​படவில்​லை, என தெரிவிக்​கப்​பட்​டது.

    மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை தரப்பு வாதங்​களால் கோபமடைந்த நீதிப​தி​கள், ‘‘தமிழக அரசின் கட்​டு்ப்​பாட்​டின்​கீழ் உள்ள துறை​களுக்கு இடையே நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தும் விஷ​யத்​தில் ஒரு​மித்த எண்​ணம் இல்​லை.

    இப்​படி அதிகாரிகள் தங்​களுக்​குள் ஒரு​வர் மீது ஒரு​வர் பழிசுமத்தி நாட்​களை கடத்​தி​னால் பாதிப்பு பொது​ மக்​களுக்​குத்​தான். இது​போன்ற அதி​காரி​களின் செயல்​பாட்டை ஒரு​போதும் ஏற்க முடி​யாது.ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை வேண்​டுமென்றே அவம​தித்த மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    இது​போல, அதி​காரி​களுக்​கிடையே ஒருங்​கிணைப்பு இல்​லாததை பல வழக்​கு​களில் பார்த்து விட்​டோம். அதனால்​தான் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களின் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்து வரு​கிறது. பொது​மக்​களுக்​கும் உயர் நீதி​மன்​றம் மீதான நம்​பிக்கை குறைந்து வரு​கிறது.

    எனவே, இந்த வழக்​கில் நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் மற்​றும் தமிழக அரசின் டிஜிபி ஆகியோரை தாமாக முன்​வந்து எதிர்​மனு​தா​ரர்​களாக சேர்க்​கிறோம். அவர்​களாவது இந்த சாலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    அதே​போல காலம் தாழ்த்​திய அதிகாரிகள் மீதும் துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த வழக்​கில் எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜன.5-ம் தேதி இரு​வரும்​ அறிக்​கை தாக்​கல்​ செய்​யவேண்​டும்​. என உத்​தர​வி்ட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி-வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பேரணி
    Next Article இந்திய மகளிர் டி20 அணியில் தமிழகத்தின் கமலினிக்கு இடம்!
    Editor TN Talks

    Related Posts

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    June 11, 2026

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    June 11, 2026

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.