தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐஜேகே-வுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சியினர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். அதன்படி, சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசன் என்பவரும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் என்பவரும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது முடிவை பாரிவேந்தர் உறுதிப்படுத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் பாரிவேந்தருக்கு செல்வாக்கு உள்ள மாவட்டமாகும். இங்கு எம்பியாக இருந்த போது அந்த மாவட்டத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு தனது எஸ்ஆர்எம் கல்லூரியில் கல்வியை கொடுத்துள்ளார். எனவே அங்கு அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது. மேலும் திமுக கூட்டணி சார்பில் குன்னம் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version